/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நீலகண்டேஸ்வரர், விண்ணவண்ண பெருமாள் கோயில் கும்பாபிேஷகம்
/
நீலகண்டேஸ்வரர், விண்ணவண்ண பெருமாள் கோயில் கும்பாபிேஷகம்
நீலகண்டேஸ்வரர், விண்ணவண்ண பெருமாள் கோயில் கும்பாபிேஷகம்
நீலகண்டேஸ்வரர், விண்ணவண்ண பெருமாள் கோயில் கும்பாபிேஷகம்
ADDED : செப் 09, 2024 05:47 AM

சிவகங்கை ; பாகனேரி கருணாகடாட்சி சமேத நீலகண்டேஸ்வரர், தாயார் ஆண்டாள் சமேத விண்ணவண்ண பெருமாள் கோயில் கும்பாபிேஷகம் நேற்று நடந்தது.
சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் அனுக்கை, விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிேஷக பூஜைகள் தொடங்கின. ஆறு கால யாகசாலை பூஜைகள் நடந்தது.
நேற்று காலை 6:45 மணிக்கு நீலகண்டேஸ்வரர் கோயில் கோபுர கலசத்தில் பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள், பாகனேரி முத்துவடுகநாத குருக்கள் ஆகியோர் தலைமையில் சிவாச்சாரியார்கள் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகத்தை நடத்தி வைத்தனர்.
ஏராளமான பக்தர்கள் கும்பாபிேஷகத்தை கண்டு தரிசித்தனர். நேற்று மாலை 4:15 மணிக்கு மகா அபிேஷகம் நடந்தது. மாலை 6:15 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், சுவாமி புறப்பாடு நடந்தது.
* பாகனேரி பூமிநீளா சமேத விண்ணவண்ண பெருமாள் கோயிலில் நேற்று காலை 5:30 மணிக்கு புன்யாகவாசனம், கும்ப பூஜையுடன் கும்பாபிேஷக விழா தொடங்கியது. அர்ச்சகர்கள் புனித நீர் கடப்புறப்பாடு நடந்தது. நேற்று காலை 7:45 மணி முதல் 8:45 மணிக்குள் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகத்தை நடத்தினர்.
நேற்று மாலை 6:30 மணிக்கு பெருமாள் திருவீதி உலா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கும்பாபிேஷகத்தில் பங்கேற்றனர். தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் வேல்முருகன் மற்றும் பாகனேரி நகரத்தார்கள் விழா ஏற்பாட்டை செய்திருந்தனர்.