ADDED : மே 28, 2024 04:57 AM
திருப்புவனம் : திருப்புவனத்தில் ஏ.டி.எம்., மையங்களில் கடந்த இரு நாட்களாக பணம் இல்லாததால் பொதுமக்கள் ஒவ்வொரு மையங்களிலும் ஏறி இறங்கி அலைச்சலுக்குஉள்ளாகி வருகின்றனர்.
திருப்புவனத்தில் தேசிய வங்கிகளின் ஏ.டி.எம்., மையங்கள் 7 உள்ளன. திருப்புவனம் மற்றும் சுற்றுவட்டார கிராமமக்கள் இந்த ஏ.டி.எம்., மையங்களையே நம்பியுள்ளனர்.
தினமும் இந்த ஏ.டி.எம். இயந்திரத்தை நம்பியே இப்பகுதி மக்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2 நாளாக ஏ.டி.எம்.,களில் போதிய அளவு பணம் இல்லாததால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இது குறித்து வங்கி அதிகாரிகள் கூறியதாவது:
தனியார் நிறுவனம் மூலம் ஏ.டி.எம்.,களில் பணம் நிரப்ப படுகிறது. குறிப்பிட்ட கால இடைவெளியில் பணம் மையங்களில் வைக்கப்படும்.
திருப்புவனத்தில் தொடர்ந்து திருமண விழாக்கள் நடந்ததாலும் விடுமுறைக்காக வந்த வெளியூர்வாசிகள் பலரும்பணம் எடுத்ததால் பணம் இல்லை. பணத்தை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்கிறோம்.