/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தேர்தல் பணிக்கு வராத அரசு ஊழியர்ஆசிரியர்கள் 140 பேருக்கு நோட்டீஸ்
/
தேர்தல் பணிக்கு வராத அரசு ஊழியர்ஆசிரியர்கள் 140 பேருக்கு நோட்டீஸ்
தேர்தல் பணிக்கு வராத அரசு ஊழியர்ஆசிரியர்கள் 140 பேருக்கு நோட்டீஸ்
தேர்தல் பணிக்கு வராத அரசு ஊழியர்ஆசிரியர்கள் 140 பேருக்கு நோட்டீஸ்
ADDED : மே 04, 2024 05:19 AM
சிவகங்கை: லோக்சபா தேர்தல் பணிக்கு வராத சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் 140 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை லோக்சபா தொகுதியின் கீழ் சிவகங்கை, காரைக்குடி, திருப்புத்துார், மானாமதுரை (தனி), ஆலங்குடி, திருமயம் ஆகிய 6 சட்டசபை தொகுதியில் 16 லட்சத்து 33 ஆயிரத்து 857 வாக்காளர்களுக்கான ஓட்டுப்பதிவு ஏப்., 19 ல் நடந்தது. இதில், 10 லட்சத்து 49 ஆயிரத்து 675 வாக்காளர்கள் 64.25 சதவீத ஓட்டுக்களை பதிவு செய்தனர். இத்தேர்தல் பணியில் ஈடுபட 1873 ஓட்டுச்சாவடிகளில், சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட 1357 ஓட்டுச்சாவடிகளுக்கு தலா 4 பேர் வீதம் அரசு ஊழியர், ஆசிரியர்கள் ஓட்டுச்சாவடி அலுவலர்களாக நியமிக்கப்பட்டனர்.
இதற்காக சிவகங்கை, திருப்புத்துார், காரைக்குடியில் தேர்தல் தொடர்பான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து தேர்தல் பணிக்கு அழைப்பு விடுத்த அரசு ஊழியர், ஆசிரியர்களில் பெரும்பாலானவர்கள் பயிற்சி வகுப்பில் பங்கேற்கவில்லை.
இதனால், மாற்றாக இருந்த ஊழியர், ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தினர். இதையடுத்து தேர்தல் பணியில் பங்கேற்காத அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப தேர்தல் கமிஷன் மாவட்ட தேர்தல் அலுவலருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து சிவகங்கை மாவட்டத்தில் ஆசிரியர்கள், கல்வித்துறை ஊழியர் 120 பேர் உட்பட 140 பேர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
தேர்தல் கமிஷனுக்கு அனுப்ப முடிவு
தேர்தல் பிரிவு அதிகாரி கூறியதாவது:
தேர்தல் பணிக்கு வராத ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு முதற்கட்டமாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்.
அவர்கள் தரும் பதில் உரிய ஆதாரத்துடன், உண்மை தன்மை இருந்தால், அது குறித்து கலெக்டர் பரிசீலனை செய்வார். உரிய ஆதாரத்தை வழங்காமல், தேர்தல் பணியில் ஈடுபடாத அரசு ஊழியர், ஆசிரியர்கள் பட்டியலை தேர்தல் கமிஷனுக்கு அனுப்புவது குறித்து தேர்தல் அலுவலரான கலெக்டர் தான் முடிவு செய்வார்.