ADDED : ஆக 07, 2024 07:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி : இளையான்குடி அருகே முனைவென்றியில் பலத்த காற்று வீசியதை தொடர்ந்து 160 ஏக்கருக்கும் மேல் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் ஆக., 4ம் தேதி சாய்ந்து விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது.
இதுதொடர்பான செய்தி தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதனைத் தொடர்ந்து இளையான்குடி தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் நேற்று முனைவென்றி கிராமத்தில் வாழை சாய்ந்த பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்து பாதிப்படைந்த விவசாயிகளிடம் அடங்கல், பட்டா, வங்கி கணக்கு எண் மற்றும் பல்வேறு விவரங்களை சேகரித்து சென்றுள்ளனர்.