/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் ரோடு விரிவாக்கத்திற்கு வல்லநேரியில் கிராவல் மண் எடுப்பு அதிகாரிகள் தகவல்
/
சிவகங்கையில் ரோடு விரிவாக்கத்திற்கு வல்லநேரியில் கிராவல் மண் எடுப்பு அதிகாரிகள் தகவல்
சிவகங்கையில் ரோடு விரிவாக்கத்திற்கு வல்லநேரியில் கிராவல் மண் எடுப்பு அதிகாரிகள் தகவல்
சிவகங்கையில் ரோடு விரிவாக்கத்திற்கு வல்லநேரியில் கிராவல் மண் எடுப்பு அதிகாரிகள் தகவல்
ADDED : ஆக 02, 2024 06:43 AM
சிவகங்கை : சிவகங்கையில் ரோடு விரிவாக்க பணிக்காக வல்லநேரி மயானம் அருகே கிராவல் மண் எடுக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சிவகங்கையில், திருப்புத்துார் ரோடு - மானாமதுரை ரோடு வரை கடந்த ஞாயிறன்று தார்ரோடு புதுப்பிக்கும் பணி நடந்தது. இப்பணிக்கு பின் ரோடு உயரமாக காணப்பட்டது.
இதனால், மதுரை முக்கு பகுதியில் வாகனத்தில் சென்றவர்கள் விபத்திற்கு உள்ளாகினர்.
இது குறித்து புகார் சென்றதால், ரோட்டை ஒட்டிய இடங்களில் கிராவல் மண் போட தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் உத்தரவிட்டனர்.
இதையடுத்து ரோடு புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர்கள், வல்லநேரி அருகே அமைத்த பாலத்தின் அருகே கொட்டிக்கிடந்த கிராவல் மண்ணை எடுத்து வந்து, நிரப்ப முடிவுசெய்தனர்.
இதற்காக நேற்று முன்தினம் மாலை வல்லநேரி - இளையான்குடி ரோட்டில் கிடந்த கிராவல் மண்ணை மண் அள்ளும் இயந்திரம் மூலம் அள்ளினர். இதன் அருகில் மயானம் இருந்துள்ளது. இதை அறிந்த கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், கிராவல் மண் அள்ளாமல் திரும்பினர்.
அரசு பணிக்கு தான் மண் எடுப்பு
சிவகங்கை தேசிய நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர் சையது இப்ராகிம் கூறியதாவது: ரோடு புதுப்பித்த ஒப்பந்தாதரர்களே, கூத்தாண்டன் அருகே பாலம் கட்டினர். அதன் அருகே தேசிய நெடுஞ்சாலை ரோட்டின் ஓரம் கிடந்த கிராவல் மண்ணை தான் அள்ளி, சிவகங்கையில் போட்ட புதிய ரோட்டின் ஓரமுள்ள பள்ளத்தில் கொட்ட உள்ளனர். இது அரசு சார்ந்த பணி தான். இதற்கு வருவாய் துறையில் அனுமதி கடிதமும் பெற்றுவிட்டோம். ரோட்டோரம் மயானம் இருந்ததால், பிரச்னையை எழுப்பிவிட்டனர்.
அனுமதி பெற்று மண் எடுப்பு
சிவகங்கை தாசில்தார் சிவராமன் கூறியதாவது: அரசு திட்டப்பணிக்காக மண் அள்ள அனுமதி கேட்டனர். அதன்படி தேசிய நெடுஞ்சாலை ரோட்டின் ஓரமாக இருந்த கிராவல் மண்ணை அள்ளத்தான் அனுமதி பெற்றுள்ளனர், என்றனர்.