தேவகோட்டையில் ஆக்கிரமிப்பு அகற்ற அதிகாரிகள் திட்டம்
தேவகோட்டையில் ஆக்கிரமிப்பு அகற்ற அதிகாரிகள் திட்டம்
ADDED : ஜூன் 06, 2026 04:31 PM
தேவகோட்டை, ஜூன் 7 -
தேவகோட்டை நகரில் நாளுக்கு நாள் கட்டுப்பாடில்லாமல் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகின்றன. போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பஸ்களை நிறுத்துவது, பயணிகள் இருபுறமும் நிற்பது, அங்கு கடைகளும் அமைக்கப்பட்டுள்ளதால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நெருக்கடியை சமாளிக்க முடியாமல் போலீசார் தடுமாறுகின்றனர்.
இதேபோல் தியாகிகள் ரோட்டிலும் ஆக்கிரமிப்பு அதிகம் உள்ளது.
நகராட்சி, நெடுஞ்சாலை துறை, வருவாய்த் துறை, போலீசார் துணையோடு ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்துள்ளனர். இந்த அகற்றும் பணி ஓரிடத்தில் மட்டும் நின்று விடாமல், அனைத்து பகுதிகளிலும் பாரபட்சமின்றி அகற்ற வேண்டும். எந்த வித சமரசத்திலும் ஈடுபடாமல் மக்கள் நலனையே முக்கியமாக கருதி ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
