/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரூ.500க்காக மூதாட்டியை அலைய விட்ட அதிகாரிகள்
/
ரூ.500க்காக மூதாட்டியை அலைய விட்ட அதிகாரிகள்
ADDED : மே 03, 2024 05:39 AM
காரைக்குடி: காரைக்குடி இடையர் தெருவை சேர்ந்தவர் மீனாள் 80. இவர் நகராட்சி படிப்பகம் ஒன்றில் பல ஆண்டுகளாக வேலை செய்து வருவதாகவும், ரூ.25 க்கு வேலைக்குச் சேர்ந்த மூதாட்டிக்கு தற்போது மாதம் ரூ.500 வழங்கப்படுவாதாகவும் தெரிவித்தார்.
கடந்த 2 மாதமாக இந்த பணத்தை வழங்கவில்லை என்று நேற்று நகராட்சி அலுவலகத்திற்கு வந்து அதிகாரிகளிடம் முறையிட்டார்.
அவர்களும் முறையாக பதில் அளிக்காததால் நகராட்சி வாசலில் நீண்ட நேரம் காத்துக் கிடந்தார்.
தகவல் அறிந்த கம்யூ., கட்சியினர் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகள் கணக்கு பார்த்து தந்து விடுவதாக தெரிவித்தனர்.
ஆணையாளர் வீரமுத்துக்குமார் கூறுகையில்: மூதாட்டி படிப்பகத்தில் உதவியாளராக வேலை செய்து வருகிறார். சம்பள பில் க்ளைம் செய்வதில் மூதாட்டி தாமதம் செய்து விட்டார். அலுவலகத்தில் பணத்தை வாங்கிச் செல்லும்படி அறிவுறுத்தினோம். பணத்தையும் வழங்கி விட்டோம் என்றார்.