/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தேவகோட்டை அருகே மின்னல் தாக்கி ஒருவர் பலி
/
தேவகோட்டை அருகே மின்னல் தாக்கி ஒருவர் பலி
ADDED : ஜூலை 14, 2024 05:48 AM
தேவகோட்டை, : தேவகோட்டையில் நேற்று முன்தினம் மாலை பலத்த காற்று, இடி மின்னலுடன் மழை கொட்டியது. பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன.
மீனாட்சி அம்மன் நகர் மற்றும் காந்தி ரோடு பகுதியில் மின் கம்பமே பாதிப்புக்குள்ளானது.
சில இடங்களில் நான்கு மணி நேரமும்,சில இடங்களில் ஏழு மணி நேரமும் மின்தடை ஏற்பட்டது.
மின்னல் தாக்கி பலி
தேவகோட்டை அருகே வேலாயுதப்பட்டினம் பகுதியில் வனத்துறை க்கு சொந்தமான காடு உள்ளது.
இந்த பகுதியில் புதுக்கோட்டை மாவட்டம் பன்னிரெண்டாம்பட்டியைச் சேர்ந்த கருப்பையா மகன் சுப்பிரமணியன். 42., மற்றும் அதே ஊரைச் சேர்ந்த சன்னாசி மகன் பழனிச்சாமி இருவரும் மூன்று மாதங்களாக தங்கி டிராக்டர் ஓட்டுதல், மரம் வெட்டும் பணியை செய்து வந்தனர். நேற்று முன்தினம் மாலை பணி முடிந்து காட்டுப்பகுதியில் அமைத்திருந்த குடிசையில் தங்கினர்.
அப்போது பெய்த கனமழையின் போது ஏற்பட்ட மின்னல் தாக்கி சுப்பிரமணியன் பலியானார்.
காயமடைந்த பழனிச்சாமி சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.வேலாயுதபட்டினம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.