/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கூட்டுறவு மேலாண்மை பயிற்சி துணைத்தேர்வு 2025 டிச., க்குள் எழுத வாய்ப்பு
/
கூட்டுறவு மேலாண்மை பயிற்சி துணைத்தேர்வு 2025 டிச., க்குள் எழுத வாய்ப்பு
கூட்டுறவு மேலாண்மை பயிற்சி துணைத்தேர்வு 2025 டிச., க்குள் எழுத வாய்ப்பு
கூட்டுறவு மேலாண்மை பயிற்சி துணைத்தேர்வு 2025 டிச., க்குள் எழுத வாய்ப்பு
ADDED : மே 03, 2024 05:34 AM
சிவகங்கை: கூட்டுறவு மேலாண்மை பயிற்சி மையத்தில் பழைய பாடத்திட்டத்தில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் 2025 டிச.,க்குள் துணை தேர்வை எழுத சிவகங்கை முதல்வர் (பொ) சக்திவேல் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: கூட்டுறவு மேலாண்மை பயிற்சி மையத்தில் பட்டய படிப்பில் சேர்ந்த மாணவர்களில் 1999 ம் ஆண்டு முதல் 2021 ம் ஆண்டு வரை 7 பாடத்திட்டங்களை கொண்டு நேரடி, அஞ்சல்வழி பட்டய பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. 2022ம் ஆண்டு முதல் இப்பயிற்சி மையத்தில் பழைய பாடத்திட்டத்தை மாற்றி, புதிதாக 10 பாடத்திட்டங்களை கொண்டு பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. இப்புதிய பாடத்திட்டங்களுக்கான துணை தேர்வு செமஸ்டர் முறைப்படி ஆண்டுக்கு இரு முறை நடத்தப்பட்டு வருகிறது.
எனவே பழைய பாடத்திட்டத்தில் படித்து தேர்ச்சி பெறாத மாணவர்கள் 2025 டிச.,க்குள் நடத்தப்படும் துணைதேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெறலாம். இந்த வாய்ப்பை பழைய பாடத்திட்டத்தில் படித்து தேர்ச்சி பெறாத மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இனிவரும் காலங்களில் அஞ்சல்வழி கல்வி இன்றி நேரடி வகுப்பில் சேர்ந்து பயிற்சி பெற்றால் மட்டுமே பட்டய சான்றிதழ் வழங்கப்படும்.
இது குறித்த விபரங்களை சிவகங்கை அருகே காஞ்சிரங்காலில் உள்ள கூட்டுறவு மேலாண்மை பயிற்சி மையத்தில் நேரடியாக வந்து தெரிந்து கொள்ளலாம். பயிற்சி மைய எண் 04575 -243 995ல் கேட்டு அறியலாம்.