/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
புதுார் வலசையில் எருது கட்டு விழா
/
புதுார் வலசையில் எருது கட்டு விழா
ADDED : ஜூலை 14, 2024 05:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி : புதுார் வலசை கிராமத்தில் தின்னாருடைய அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு எருது கட்டு விழா நடைபெற்றது. கடந்த 5ம் தேதி காலை காப்பு கட்டுதல் விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தினந்தோறும் சாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேக,ஆராதனை நடைபெற்று வந்தன.
நேற்று எருதுகட்டு விழாவை முன்னிட்டு கோயிலுக்கு முன்பாக உள்ள வயல்களில் வடங்களை கட்டி மாடுகளை அவிழ்த்து விட்டனர். அங்கு கூடியிருந்த கிராம மக்கள் பிடித்தனர். அப்போது ஒரு மாட்டை பிடித்ததில் இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. இளையான்குடி போலீசார் லேசாக தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.