/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மரபுசாரா எரிசக்தி குறித்த ஓவிய போட்டி
/
மரபுசாரா எரிசக்தி குறித்த ஓவிய போட்டி
ADDED : மார் 10, 2025 04:56 AM
சிவகங்கை: சிவகங்கையில் தேசிய பசுமைப்படை சார்பில் சூழல் பாதுகாப்பில் மரபுசாரா எரிசக்தி குறித்த ஓவிய போட்டி நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) மாரிமுத்து தலைமை வகித்தார்.
உதவி திட்ட அலுவலர் பீட்டர் லெமாயூ முன்னிலை வகித்தார். ஆசிரியர் ஆரோக்கியசாமி வரவேற்றார். மாவட்ட அளவில் இருந்து 82 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். நடுவர்களாக ஓவியர் செல்வம், ஆசிரியர் பயிற்றுநர்கள் தனலட்சுமி, பிரிசி செயல்பட்டனர்.
இப்போட்டியில் மிளகனுார் அரசு உயர்நிலை பள்ளி மாணவர் தினேஷ்குமார் முதலிடம், சிவகங்கை புனித ஜோசப் பள்ளி மாணவர் ராஜசேதுபதி இரண்டாம் இடம், மரக்காத்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவர் கோபாலகிருஷ்ணன் மூன்றாம் இடம் பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, 10 பள்ளிக்கு ஆறுதல் பரிசு வழங்கினர். சிலுக்கப்பட்டி தலைமை ஆசிரியர் அன்புநாதன், வெள்ளிக்குறிச்சி தலைமை ஆசிரியர் அருள்மொழி, அறிவியல் இயக்க கிளை தலைவர் மணவாளன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் பிரிட்டோ நன்றி கூறினார்.