/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குறைந்தழுத்த மின்சாரத்தால் குடிநீர் வினியோகம் பாதிப்பு ஊராட்சி தலைவர்கள் புலம்பல்

ADDED : மார் 25, 2024 07:21 AM
சிங்கம்புணரி, : சிங்கம்புணரியில் குறைந்தழுத்த மின்சாரத்தால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுவதாக ஊராட்சித் தலைவர்கள் புலம்புகின்றனர்.
இவ்வொன்றியத்தில் தெற்கு பகுதியில் உள்ள ஏரியூர், அரளிக்கோட்டை, வடவன்பட்டி, எஸ்.மாம்பட்டி, எருமைப்பட்டி, உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் சில நாட்களாக குறைந்தழுத்த மின்சாரமே விநியோகிக்கப்படுகிறது. மின் மோட்டார்களை இயக்கும்போது அவை பழுதடைந்து விடுகிறது. சில வீடுகளில் மின்சாதனங்கள் பழுதாகிறது.
ஊராட்சிகளின் குடிநீர் தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றும் போது மோட்டார்கள் பழுதடைந்து குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுகிறது. ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்கீடு குறைவாக இருக்கும் நிலையில் சம்பளம் தரவே தலைவர்கள் திணறி வருகின்றனர். இந்நிலையில் குறைந்தழுத்த மின்சாரத்தால் மோட்டார்கள் பழுதடைவதால் அதை சரிசெய்ய முடியாமல் பல தலைவர்கள் புலம்புகின்றனர். எனவே குறைந்தழுத்த மின்சாரத்தை சீரமைக்க வேண்டும்.