/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பணித்துணை விநாயகர் வருடாபிேஷக பூஜை
/
பணித்துணை விநாயகர் வருடாபிேஷக பூஜை
ADDED : செப் 05, 2024 05:06 AM

சிவகங்கை: சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பணித்துணை விநாயகர் கோயிலில் வருடாபிேஷக பூஜை மற்றும் 108 சங்காபிேஷகம் நடந்தது.
சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாக அறிவொளி பூங்காவில் 39 ஆண்டாக பணித்துணை விநாயகர் கோயில் உள்ளது. கடந்த ஆண்டு இக்கோயிலில் கும்பாபிேஷகம் நடந்தது. நேற்று இதற்கான வருடாபிேஷக பூஜை நடந்தது. இதையொட்டி கணபதிேஹாமம், அனுக்கை, விக்னேஸ்வர பூஜை நடந்தது.
ேஹாமத்தில் கலசத்தில் வைக்கப்பட்ட புனித நீரில் விநாயகருக்கு அபிேஷகம் செய்தனர். சிவாச்சாரியார்கள் புனித நீர் கலசத்தை கோயில் வளாகத்தை சுற்றி வந்து, பூஜைகள் செய்தனர். சந்தனக்காப்புடன் ராஜ அலங்காரத்தில் விநாயகர் எழுந்தருளினார். விழாவில் மதுரை தொழிலதிபர் கண்ணன், திருப்புவனம் பேரூராட்சி கவுன்சிலர் அயோத்தி, தி.மு.க., ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம் மற்றும் தாசில்தார், கலெக்டர், எஸ்.பி., அலுவலக ஊழியர்கள் பங்கேற்றனர்.
பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சன்னதியில் லிங்க வடிவில் 108 சங்குகளை அடுக்கி அபிேஷகம் செய்தனர். விழாக்குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.