/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் சம்பள பில் வழங்கும் அலுவலர்களுக்கான ஆலோசனை வருமான வரி அதிகாரிகள் பங்கேற்பு

ADDED : ஆக 08, 2024 11:36 PM
சிவகங்கை : அரசு அலுவலகம், பள்ளிகளில் சம்பள பில் தயாரிக்கும் அலுவலர்களுக்கு வருமான வரி பிடித்தம் செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் சிவகங்கையில் நடந்தது.
கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். மதுரை வருமான வரி கூடுதல் கமிஷனர் பி.ஸ்ரீதரன், துணை கமிஷனர்மதுசூதன் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் சம்பளபில் அனுமதிக்கும் அலுவலர்களுக்கு இணையதளத்தில் 24 ஜி மற்றும் 24 க்யூ பதிவேற்றம் செய்யும் முறை, வருமான வரி கணக்கு தாக்கல் செய்தல், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதில் பிழையை தவிர்த்தல் குறித்த ஆலோசனை வழங்கப்பட்டது.
சம்பள பட்டியலில் வருமான வரி பிடிப்பது குறித்தும் விளக்கம் அளித்தனர். ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட கருவூலக அலுவலர் எஸ்.கண்ணன், மதுரை வருமான வரி அலுவலர் வெங்கடேஸ்வரன், கருவூலக அலுவலக உதவி அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், பிற துறை சம்பள பில் வழங்கும் அலுவலர்கள் பங்கேற்றனர்.