/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குறுகிய சாலையால் பயணிகள் அவதி; ஆத்தங்குடி சாலை அகலப்படுத்தப்படுமா
/
குறுகிய சாலையால் பயணிகள் அவதி; ஆத்தங்குடி சாலை அகலப்படுத்தப்படுமா
குறுகிய சாலையால் பயணிகள் அவதி; ஆத்தங்குடி சாலை அகலப்படுத்தப்படுமா
குறுகிய சாலையால் பயணிகள் அவதி; ஆத்தங்குடி சாலை அகலப்படுத்தப்படுமா
ADDED : மே 31, 2024 06:18 AM

காரைக்குடி : காரைக்குடியின் முக்கிய சுற்றுலா பகுதியாக விளங்கும் ஆத்தங்குடி சாலையை விரிவுபடுத்த வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செட்டிநாட்டு என்றாலேபிரமிக்க வைக்கும் பங்களாக்களே அனைவரின் நினைவுக்கு வரும். இந்த பங்களாக்களின் அழகை அலங்கரிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது ஆத்தங்குடி டைல்ஸ்கள். கலை நயத்துடன், மனித உழைப்பில் தயாராகும் ஆத்தங்குடி டைல்ஸ் கற்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது.
ஆத்தங்குடியில் மட்டுமே டைல்ஸ் தயார் செய்யப்படுவதற்கு காரணம் ஆத்தங்குடியில் மட்டுமே கிடைக்கும் வாரி வகை மணலே ஆகும். டைல்ஸ் தொழிலை நம்பி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர்.
ஆத்தங்குடியில் உள்ள பிரம்மாண்ட பங்களாக்கள்மற்றும் டைல்ஸ் தயாரிப்பு தொழிலை பார்வையிடதினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆத்தங்குடி பகுதியில் சுற்றுலாவிற்கு என எவ்வித வளர்ச்சி பணியும் செய்யப்படவில்லை.
தவிர ஆத்தங்குடி குன்றக்குடி செல்லும் முக்கிய சாலையானது குறுகிய சாலையாகவும், மழைக்காலங்களில் சகதிச் சாலையாகவும் காட்சியளிப்பதால் சுற்றுலாவாக வாகனங்களில் வருவோர் மிகுந்த சிரமப்படுகின்றனர்.
எனவே, ஆத்தங்குடி சாலையை அகலப்படுத்துவதோடு சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ற வசதிகளை செய்து தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துஉள்ளது.