/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
6 மாதமாக தண்ணீர் வரவில்லை சிவகங்கையில் மக்கள் அவதி
/
6 மாதமாக தண்ணீர் வரவில்லை சிவகங்கையில் மக்கள் அவதி
6 மாதமாக தண்ணீர் வரவில்லை சிவகங்கையில் மக்கள் அவதி
6 மாதமாக தண்ணீர் வரவில்லை சிவகங்கையில் மக்கள் அவதி
ADDED : ஏப் 18, 2024 06:27 AM

சிவகங்கை: சிவகங்கை நகராட்சி 7வது வார்டு திருப்பதி நகர், சாஸ்திரி 5வது தெருவில் ஆறு மாதத்துக்கும் மேலாக குடிநீர் வராததால் தண்ணீர் இன்றி சிரமப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
சிவகங்கை நகராட்சி 7வது வார்டில் உள்ளது திருப்பதி நகர், சாஸ்திரி தெரு. இங்கு 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். திருப்பதி நகர், சாஸ்திரி தெரு 5வது வீதி உள்ளிட்ட பகுதிகள் நகராட்சியின் விரிவாக்க பகுதி. இந்த பகுதிகளில் 6 மாதத்திற்கும் மேலாக நகராட்சி சார்பில் வழங்கக்கூடிய தண்ணீர் வரவில்லை. நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகளும் பழுதடைந்துள்ளது.
திருப்பதி நகர் சு.சுப்பிரமணியன்: எங்கள் பகுதியில் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். இந்த பகுதிக்கு 6 மாதமாக நகராட்சி தண்ணீர் வரவில்லை. இது குறித்து பலமுறை நகராட்சியில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. மாவட்ட நிர்வாகம் எங்கள் பகுதிக்கு தண்ணீர் வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாஸ்திரி 5 தெரு உமா: கோடை காலம் ஆரம்பித்து விட்டது. வழக்கத்திற்கு மாறாக தண்ணீரின் தேவை அதிகமாக உள்ளது. ஆனால் நகராட்சி சார்பில் வழங்கக்கூடிய குடிநீர் எங்கள் பகுதிக்கு வருவதே இல்லை. நாங்களும் கடந்த 6 மாத காலமாக நகராட்சியில் பல புகார்களை அளித்துள்ளோம். எந்த நடவடிக்கையும் இல்லை. தினசரி குடிப்பதற்கு 30 ரூபாய் கொடுத்து தண்ணீர் வாங்குகிறோம். மாவட்ட நிர்வாகம் எங்கள் பகுதிக்கு தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நகராட்சி கண்காணிப்பாளர் நவநீதகிருஷ்ணன் கூறுகையில், அந்த பகுதியில் பைப் லைன் முழுவதும் சேதம் அடைந்துள்ளது. புதிதாக பைப் லைன் பதிக்கவேண்டும். அதற்கான பணி நகராட்சி சார்பில் நடக்க உள்ளது. கூடிய விரைவில் பணி முடிந்து தண்ணீர் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

