/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பா.ஜ., நிர்வாகி கொலை வழக்கில் சி.பி.ஐ., விசாரிக்க மக்கள் முற்றுகை
/
பா.ஜ., நிர்வாகி கொலை வழக்கில் சி.பி.ஐ., விசாரிக்க மக்கள் முற்றுகை
பா.ஜ., நிர்வாகி கொலை வழக்கில் சி.பி.ஐ., விசாரிக்க மக்கள் முற்றுகை
பா.ஜ., நிர்வாகி கொலை வழக்கில் சி.பி.ஐ., விசாரிக்க மக்கள் முற்றுகை
ADDED : ஆக 05, 2024 06:44 PM

சிவகங்கை:சிவகங்கை அருகே சாத்தரசன்கோட்டையில் பா.ஜ., கூட்டுறவு பிரிவு செயலர் கொலை செய்யப்பட்டதற்கு கஞ்சா விற்பனையை தடுத்ததே காரணம் என்றும், அதற்கு,சி.பி.ஐ., விசாரிக்கவும் கோரி, கலெக்டர் அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டனர்.
சிவகங்கை அருகே எம்.வேலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வக்குமார், 45, பா.ஜ., கூட்டுறவு பிரிவு மாவட்ட செயலர். ஜூலை 27, இரவு 9:00 மணிக்கு வேலாங்குளத்திற்கு சென்றபோது, எதிரே இரு டூ வீலர்களில் வந்தவர்கள் செல்வக்குமாரை வெட்டி கொலை செய்தனர்.
முன்விரோதம் காரணமாக சம்பவம் நடந்ததாக கூறி 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
*கஞ்சா காரணம்
'சாத்தரசன்கோட்டையில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசுக்கு செல்வகுமார் தகவல் தெரிவித்து வந்தார். கஞ்சா வியாபாரிகள், சிலரை துாண்டி விட்டு செல்வக்குமாரை கொலை செய்துள்ளனர்.
எனவே, இவ்வழக்கை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்க கோரி, நேற்று காலை 11:15 மணிக்கு சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தை எம்.வேலாங்குளம் மக்கள் முற்றுகையிட்டனர்.
வழக்கு விசாரணையை சி.பி.ஐ.,யிடம் அரசு ஒப்படைக்க வலியுறுத்தி, செல்வக்குமாரின் மகன் ஆசைக்கூரி மற்றும் கிராம மக்கள் கலெக்டர் ஆஷா அஜித்திடம், மனு அளித்தனர்.