/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரோட்டோர பிளக்ஸ் பேனர் ஆக்கிரமிப்பால் மக்கள் அவதி
/
ரோட்டோர பிளக்ஸ் பேனர் ஆக்கிரமிப்பால் மக்கள் அவதி
ADDED : பிப் 25, 2025 06:49 AM
சிவகங்கை: நீதிமன்ற உத்தரவையும் மீறி சிவகங்கை மாவட்டத்தில் ரோட்டோரத்தில்கட்சியினர், பொது அமைப்பினர் பிளக்ஸ் பேனர்களை வைத்து ஆக்கிரமித்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி மாநகராட்சி, சிவகங்கை, தேவகோட்டை, மானாமதுரை நகராட்சி, 11 பேரூராட்சிகள் உள்ளன. இங்கு ரோட்டோரங்களில் பேனர் வைத்து ஆக்கிரமிப்பு செய்ய அனுமதிக்க கூடாது.
மேலும் இது போன்ற பேனர்களை அகற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த உத்தரவையும் மீறி மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் ரோட்டோரங்களில் கட்சியினர், பொது அமைப்பினர் பேனர் வைத்து ரோட்டை ஆக்கிரமித்துஉள்ளனர்.
இதுவே வாகன விபத்து அதிகரிக்க காரணமாக இருந்து வருகிறது. இது குறித்து சிவகங்கை கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
காமராஜர் மக்கள் கட்சி மாவட்ட தலைவர் அருளானந்து கூறியதாவது:
காரைக்குடி மாநகராட்சியில் ரோட்டை ஆக்கிரமித்து புற்றீசல் போல் பேனர்கள் அதிகரித்துள்ளன. இவற்றை அகற்ற வேண்டிய உள்ளாட்சிஅமைப்பு கண்டு கொள்ளாமல் உள்ளன. பேனர்களை அகற்ற வேண்டும்.
மேலும் காரைக்குடி அருகே என்.ஜி.ஓ., காலனி, ஹவுசிங் போர்டு, வி.ஏ.ஓ., காலனி உள்ளிட்ட பகுதிகள் குன்றக்குடி போலீஸ் நிலைய எல்கைக்குள் உள்ளது. இங்கு சம்பவம் நடந்தால் குன்றக்குடியில் புகார் அளிக்க 10 கி.மீ., துாரம் செல்ல வேண்டியுள்ளது.
எனவே காரைக்குடி என்.ஜி.ஓ., காலனியில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என கலெக்டர் ஆஷா அஜித்திடம் மனு அளித்துள்ளேன், என்றார்.