/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தெருக்களில் கட்டுமான பொருட்கள் தவிக்கும் பொதுமக்கள்
/
தெருக்களில் கட்டுமான பொருட்கள் தவிக்கும் பொதுமக்கள்
தெருக்களில் கட்டுமான பொருட்கள் தவிக்கும் பொதுமக்கள்
தெருக்களில் கட்டுமான பொருட்கள் தவிக்கும் பொதுமக்கள்
ADDED : ஆக 03, 2024 04:52 AM

திருப்புவனம்: திருப்புவனம் நகரின் பிரதான வீதியில் ரோட்டை மறைத்து கொட்டப்பட்ட கட்டுமான பொருட்களால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர்.
திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயில், வைகை ஆற்றில் திதி, தர்ப்பணம் வழங்க தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். ரத வீதியில் கட்டுமான பணிக்காக ஒருவர் ரோட்டை மறைத்து மணல், ஜல்லி, சிமென்ட் உள்ளிட்ட பொருட்களை கொட்டி வைத்துள்ளார். பக்தர்கள் அப்பகுதி வழியாக செல்ல முடியவில்லை. ஆட்டோ, கார் உள்ளிட்ட எந்த வாகனமும் செல்ல முடியவில்லை. நாளை ஆடி அமாவாசை தினம் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த பாதையை பயன்படுத்தி சென்று வருவார்கள், பாதையில் கட்டுமான பொருட்கள் இருப்பதால் பொதுமக்கள், பக்தர்கள் செல்ல முடியாது, மாவட்ட நிர்வாகம் ரத வீதியில் கட்டுமான பொருட்களை கொட்டி இடையூறு ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.