/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருக்கூடல் மலைக்கு பெருமாள் எழுந்தருளல்
/
திருக்கூடல் மலைக்கு பெருமாள் எழுந்தருளல்
ADDED : ஜூலை 29, 2024 10:49 PM

மானாமதுரை : திருப்பரங்குன்றம் திருக்கூடல்மலை சூட்டுக்கோல் ராமலிங்க விலாசத்தில் கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்ட நவநீத பெருமாள் கோயில் 105வது ஆண்டு பிரம்மோற்ஸவ விழா ஜூலை 21ம் தேதி துவங்கியது.
மலையில் இருந்து கிளம்பிய சுவாமிகள் மதுரை, திருப்புவனம், திருப்பாச்சேத்தி மானாமதுரை ஆகிய ஊர்கள் வழியே 24 நாட்கள் வலம் வந்து பின்னர் திருக்கூடல் மலைக்கு சென்றடைவார்.
வழியில் அமைக்கப்பட்டுள்ள மண்டகப்படிகளில் அலங்காரத்துடன் எழுந்தருளும் நவநீத பெருமாளுக்கு அபிஷேக,ஆராதனை, பூஜை நடைபெற உள்ளன.
நேற்று வாகுடி சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமி, மாயாண்டி சுவாமிகள் மடத்திற்கு எழுந்தருளிய சுவாமிகளுக்கு வரவேற்பளிக்கப்பட்டு அபிஷேக, ஆராதனை, பூஜை நடைபெற்றன. அன்னதானமும் நடைபெற்றது.