/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா
/
பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா
ADDED : மே 24, 2024 02:38 AM
திருப்புத்துார்: திருப்புத்துாரில் மன்னர் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன்மாறன் 1349 வது சதய விழா கொண்டாடப்பட்டது.
திருப்புத்தூர் அண்ணாத்துரை சிலை அருகில் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன் மாறன் படம் வைக்கப்பட்டிருந்தது. வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் நிர்வாகிகள் பலரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். வீர முத்தரையர் முன்னேற்ற சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆத்திக்காடு மாரிமுத்து, தமிழர் தேசம் கட்சி ஒன்றிய செயலாளர் சுகுமாரன், ஒன்றிய இளைஞரணி மருதுபாண்டியன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். பா.ஜ. மாவட்ட செயலாளர் சேது சிவராமன், இந்து ஆலய பாதுகாப்பு குழு மாநில துணைத்தலைவர் நாகசுந்தரம், ஒன்றிய பொதுச் செயலாளர் மணிமாறன், அருண் மற்றும் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.