ADDED : பிப் 15, 2025 06:09 AM
சிவகங்கை : கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் ஆஷா அஜித் பரிசு வழங்கினார்.
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கென பேச்சு, படைப்பாற்றலை வளர்க்க மாவட்ட அளவில் கவிதை,கட்டுரை,பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டன.
பள்ளி,கல்லுாரி அளவில் அனைத்து போட்டிகளிலும் முதல் 3 இடங்களை பிடித்த 18 மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10,000,இரண்டாம் பரிசு ரூ.7000, மூன்றாம் பரிசு ரூ.5000 வீதம், பாராட்டு சான்றினை கலெக்டர் வழங்கினார்.
குறைதீர் கூட்டம்: குறைதீர் கூட்டத்தில் மக்களிடம் இருந்து 317 மனுக்கள் பெறப்பட்டு, துறை நடவடிக்கைக்கு பரிந்துரை செய்தனர்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி,துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கார்த்திகேயன்,தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் சீதாலட்சுமி பங்கேற்றனர்.

