/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மர்ம முறையில் குழந்தை இறப்பு தாயை தேடி அலையும் போலீசார்
/
மர்ம முறையில் குழந்தை இறப்பு தாயை தேடி அலையும் போலீசார்
மர்ம முறையில் குழந்தை இறப்பு தாயை தேடி அலையும் போலீசார்
மர்ம முறையில் குழந்தை இறப்பு தாயை தேடி அலையும் போலீசார்
ADDED : மே 26, 2024 12:28 AM
திருப்பாச்சேத்தி,:சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே நாட்டாகுடியில் நான்கு மாத ஆண் குழந்தையின் இறப்பிற்கு காரணமான தாயை கண்டறிய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
நாட்டாகுடியைச் சேர்ந்த சந்திரசேகர் கோவையில் பணியாற்றும் போது அங்கு வந்த நாகர்கோவிலைச் சேர்ந்த மஞ்சு என்பவருடன் பழகி, திருமணம் செய்து கொண்டார். சில நாட்களாக சிவகங்கை, நாட்டாகுடியில் வசித்த நிலையில், கடந்த 21ம் தேதி குழந்தையுடன் மஞ்சு மாயமானார்.
மொபைல் போனில் கணவர் வீட்டாருடன் தொடர்பு கொண்டு, ஆண் குழந்தையை கட்டைப்பையில் வைத்து கோவில் பின்னால் போட்டு விட்டு வந்து விட்டேன் என்றும், என்னை தேடாதீர்கள் என மஞ்சு தெரிவித்துள்ளார். 22ம் தேதி காலையில் சென்று பார்த்த போது குழந்தை இறந்து கிடந்தது.
குழந்தை உடலை போலீசாருக்கு தெரியாமல் சந்திரசேகர் குடும்பத்தினர் அடக்கம் செய்தனர். வி.ஏ.ஓ., புகழேந்தி புகார்படி திருப்பாச்சேத்தி போலீசார் குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்து மீண்டும் புதைத்தனர்.
குழந்தை எப்படி இறந்தது என தாயார் மஞ்சுவை பிடித்தால் மட்டுமே தெரியும் என்ற நிலையில் அவரை பற்றிய எந்த விபரமும் சந்திரசேகருக்கு தெரியாததால், மஞ்சுவின் மொபைல் போன் எண்ணை கண்காணித்து போலீசார் நாகர்கோவில் சென்றும் மஞ்சுவை கண்டு பிடிக்க முடியவில்லை.
இதனையடுத்து போலீசார் கோவையில் மஞ்சு பணியாற்றிய மருத்துவமனைக்கு விசாரணைக்கு சென்றுள்ளனர். மஞ்சு மற்றும் அவரது தாய் இருவரின் மொபைல் போனும் அணைத்து வைக்கப்பட்டுள்ளதால் கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
குழந்தையின் மரணம் எப்படி நிகழ்ந்தது என தெரியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.