/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
'சிசிடிவி' கேமராக்கள் பற்றாக்குறை போலீசார் தவிப்பு
/
'சிசிடிவி' கேமராக்கள் பற்றாக்குறை போலீசார் தவிப்பு
'சிசிடிவி' கேமராக்கள் பற்றாக்குறை போலீசார் தவிப்பு
'சிசிடிவி' கேமராக்கள் பற்றாக்குறை போலீசார் தவிப்பு
ADDED : மார் 06, 2025 05:21 AM
திருப்புவனம்: திருப்புவனம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் போதிய சி.சி.டி.வி., கேமராக்கள் இல்லாததால் குற்றச்சம்பவங்களில் விசாரணை மந்தமாக உள்ளதாக போலீசார் புலம்புகின்றனர்.
திருப்புவனம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து தினசரி மதுரை, சிவகங்கை, பரமக்குடி உள்ளிட்ட நகரங்களுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர். திருப்புவனம் நகரில் மட்டும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
நாளுக்கு நாள் திருப்புவனத்தில் குடியேறுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் புதுப்புது குடியிருப்பு உருவாகி வருகின்றன. குற்றச் சம்பவங்களில் போலீசாருக்கு துணையாக இருப்பது சி.சி.டி.வி., மற்றும் அலைபேசி பதிவு தான். திருப்புவனத்தில் வீடுகள், கடைகள், தொழிற்சாலைகளில் பாதுகாப்பிற்கு சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தியுள்ளனர். ஆனால் அனைத்து கேமராக்களும் அவரவர் வீடு, தொழிற்சாலை பாதுகாப்பிற்காக மட்டுமே இருப்பதால் பொதுபயன்பாட்டிற்கான எந்த தகவலும் கிடைப்பதில்லை.
போலீசார் கூறுகையில்: குற்றவாளிகள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு டூவீலர், கார் உள்ளிட்டவற்றில் செல்வது சிசிடிவியில் பதிவாகும், அவர்கள் சென்ற நேரத்தை கணக்கிட்டு அவர்களை பின் தொடர்ந்து நடவடிக்கை எடுப்போம், குறைந்த பட்சம் மூன்று முதல் அதிகபட்சம் 16 கேமராக்கள் வரை பொருத்துவார்கள், அதில் ஒன்றை மட்டும் ரோடு, வீதியை பார்த்தவாறு அமைக்க வேண்டும் அப்போது தான் குற்றவாளிகளை அடையாளம் காண முடியும்.
அதே போல சிசிடிவி கேமராக்கள் முன்பு மர கிளைகள், பேனர்கள் மறைக்காத நிலையில் அமைக்க வேண்டும், அப்போதுதான் குற்றவாளிகளை அடையாளம் காண முடியும். திருப்புவனம் பழையூரில் டூவீலர் திருடிச் சென்று மீண்டும் வைத்து விட்ட சம்பவத்தில் அருகே உள்ள வீடுகளில் சிசிடிவி கேமரா இருந்தும் ரோட்டை நோக்கி எதுவும் இல்லாததால் குற்றவாளிகளை கண்டறிய முடியவில்லை, என்றனர்.