நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கார் மோதி டூவீலரில் சென்ற பெண் பலி
திருப்பாச்சேத்தி: திருப்பாச்சேத்தி அருகே முதுவன்திடல் அழகுராமன். இவர் தனது டூவீலரில் மனைவி ராஜேஸ்வரி 36, யை அழைத்து சென்றார். சிவகங்கை சென்று மீண்டும் அங்கிருந்து டூவீலரில் நான்கு வழிச்சாலை வழியே வந்தனர். திருப்பாச்சேத்தி டோல்கேட் அருகே இவரதுடூவீலரில் கார் மோதியதில், நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில், ராஜேஸ்வரி உயிரிழந்தார். திருப்பாச்சேத்தி போலீசார் கார் டிரைவர் மதுரை பழனிக்குமாரிடம் விசாரிக்கின்றனர்.