முதியவர் பலி
சாலைக்கிராமம்: சாலைக்கிராமம் அருகே ஞானசமுத்திரம் செல்வராஜ் 65. இவர் இங்குள்ள அம்மன் கோயில் ஊரணியில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
டூவீலர் விபத்து : வாலிபர் பலி
சாலைக்கிராமம்: வடக்கு சாலைகிராமம் நடராஜன் மகன் சந்தோஷ் 21. இவர் டூவீலரில் சென்றபோது, வடக்கு வண்டல் கிராமம் அருகே நிலை தடுமாறி கீழே விழுந்ததில், பலத்த காயமுற்றார். சாலைக்கிராமம் ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டு செல்லும் வழியில் பலியானார். சாலைக்கிராமம் போலீசார் விசாரிக்கின்றனர்.
பெண்ணிடம் 7 பவுன் வழிப்பறி
இளையான்குடி: இளையான்குடி அருகே பஞ்சாத்தியை சேர்ந்த கண்ணன் மனைவி வசந்தா. இவர் தன் மகள் மதுஸ்ரீயுடன் துகவூரில் இருந்து சாலைக்கிராமத்திற்கு டூவீலரில் சென்றார். பின்னால் டூவீலரில் வந்த மர்ம நபர்கள் வசந்தா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் செயினை வழிப்பறி செய்து தப்பினர். இளையான்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.