பார் ஊழியரிடம் கத்தியைகாட்டி மிரட்டல்: 2 பேர் கைது
சிவகங்கை: காளையார்கோவில் எஸ்.எஸ்., நகர் கருப்பையா மகன் திருநாவுக்கரசு 52. இவர் மெயின் ரோட்டில் உள்ள மதுக்கடை பாரில் பணிபுரிகிறார். ஜூலை 30 அன்று இரவு 8:30 மணிக்கு பாருக்கு சென்ற காளையார்கோவில் கிருஷ்ணாநகர் நாகராஜ் மகன் பிரசாத் 25, கீழவலையம்பட்டி பாலு மகன் சக்திவேல் 23, இருவரும் மது அருந்திய போது கூச்சலிட்டனர். அங்கு பணிபுரியும் திருநாவுக்கரசு சத்தமில்லாமல் சாப்பிட்டு செல்லுமாறு கூறியுள்ளார். இதில் ஏற்பட்ட பிரச்னையில் கத்தியை காட்டி மிரட்டினர். எஸ்.ஐ., குகன், கத்தியை காட்டி மிரட்டிய பிரசாத், சக்திவேலை கைது செய்தார்.தற்கொலை
கல்லல்: காரைக்குடி ரயில்வே கேட் அருகே வசிப்பவர் வெள்ளைச்சாமி மனைவி மேகலா 50. இவர்களுக்கு 3 மகன்கள். இதில், மூன்றாவது மகன் ராஜேஷ்குமார் கடந்த 3 மாதத்திற்கு முன் வெளிநாட்டில் வேலைபார்த்தபோது, இறந்து விட்டார். இந்த மன வருத்தத்தில் இருந்தவர், ஆக.,1 ம் தேதி காலை 7:00 மணிக்கு சகோதரி வீட்டிற்கு சென்று துாக்கிட்டு தற்கொலை செய்தார். கல்லல் இன்ஸ்பெக்டர் வாசிவம் விசாரிக்கிறார்.
சிவகங்கை: சிவகங்கை அருகே மலம்பட்டி ஒக்கப்பட்டி காலனியை சேர்ந்த மாணிக்கம் மகன் கந்தசாமி 40. இவருக்கு 2 குழந்தைகள். நோய்வாய்பட்ட இவர், மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த மனஉளைச்சலில் ஜூலை 31 அன்று மதியம் 2:00 மணிக்கு வீட்டில் அரளி விதையை அரைத்து குடித்துள்ளார். சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இன்ஸ்பெக்டர் மணிகண்டன் விசாரிக்கிறார்.
கீழே விழுந்தவர் பலி
சிவகங்கை: சிவகங்கை அருகே சாலுார் வேலனி தெற்கு பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராமு 50.இவர் மது அருந்திவிட்டு கீழே தவறி விழுந்தார். காயத்துடன் அவரை சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியில் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் மணிகண்டன் விசாரிக்கிறார்.
பார் ஊழியரிடம் கத்தியைகாட்டி மிரட்டல்: 2 பேர் கைது
சிவகங்கை: காளையார்கோவில் எஸ்.எஸ்., நகர் கருப்பையா மகன் திருநாவுக்கரசு 52. இவர் மெயின் ரோட்டில் உள்ள மதுக்கடை பாரில் பணிபுரிகிறார். ஜூலை 30 அன்று இரவு 8:30 மணிக்கு பாருக்கு சென்ற காளையார்கோவில் கிருஷ்ணாநகர் நாகராஜ் மகன் பிரசாத் 25, கீழவலையம்பட்டி பாலு மகன் சக்திவேல் 23, இருவரும் மது அருந்திய போது கூச்சலிட்டனர். அங்கு பணிபுரியும் திருநாவுக்கரசு சத்தமில்லாமல் சாப்பிட்டு செல்லுமாறு கூறியுள்ளார். இதில் ஏற்பட்ட பிரச்னையில் கத்தியை காட்டி மிரட்டினர். எஸ்.ஐ., குகன், கத்தியை காட்டி மிரட்டிய பிரசாத், சக்திவேலை கைது செய்தார்.தற்கொலை
கல்லல்: காரைக்குடி ரயில்வே கேட் அருகே வசிப்பவர் வெள்ளைச்சாமி மனைவி மேகலா 50. இவர்களுக்கு 3 மகன்கள். இதில், மூன்றாவது மகன் ராஜேஷ்குமார் கடந்த 3 மாதத்திற்கு முன் வெளிநாட்டில் வேலைபார்த்தபோது, இறந்து விட்டார். இந்த மன வருத்தத்தில் இருந்தவர், ஆக.,1ம் தேதி காலை 7:00 மணிக்கு சகோதரி வீட்டிற்கு சென்று துாக்கிட்டு தற்கொலை செய்தார். கல்லல் இன்ஸ்பெக்டர் வாசிவம் விசாரிக்கிறார்.