ADDED : ஏப் 18, 2024 12:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை:சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே வேம்பனியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் 33. மத்திய ரிசர்வ் போலீசில் பணிபுரிகிறார். விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
இங்கு தபால் ஓட்டு போடும் பணி நடந்தது. காளையார் கோவில் தாசில்தார் அலுவலகத்தில் தபால் ஓட்டு போட வந்த சதீஷ்குமார், தான் ஓட்டளித்த சீட்டை வேட்பாளர் படங்களுடன் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
இதை அறிந்த கலெக்டர் ஆஷா அஜித் உத்தரவின் படி, காளையார் கோவில் போலீசார், சதீஷ்குமார் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

