ADDED : ஆக 16, 2024 04:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே சதுர்வேதமங்கலத்தில் 100 ஆண்டிற்கு முன் தபால் நிலையம் திறக்கப்பட்டது.
அக்கால கட்டத்தில் சொந்த கட்டடமின்றி, கிராமத்திற்கு சொந்தமான இடத்தில் இயங்கி வந்தது. இந்நிலையில் தபால் நிலையம் துவங்கி 100 ஆண்டு நிறைவடைந்ததை அடுத்து, கிராம மக்கள் ரூ.2 லட்சம் செலவில் கட்டடத்தை சீரமைத்து கொடுத்து, நுாற்றாண்டு விழா கொண்டாடினர். கிராமத்தினர் தபால் நிலையத்தில் கொடியேற்றினர். அலுவலகம் முன் உள்ள விநாயகர் சிலைக்கு சிறப்பு அபிேஷகம் செய்தனர். கிராம மக்கள், தபால் துறை ஊழியர்கள், போலீசார் பங்கேற்றனர்.
//-

