ADDED : மார் 07, 2025 08:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை, : குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கு கோழி வளர்ப்பு குறித்த பயிற்சி வகுப்பு நடந்தது.
குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலைய தலைவர் செந்துார்குமரன் வரவேற்றார். காரைக்குடி கால்நடை துறை உதவி இயக்குனர் பாலசுப்பிரமணியன் வாழ்த்துரை வழங்கினார்.
சிவகங்கை தாட்கோ மாவட்ட மேலாளர் செலினா, கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் ராமசந்திரன் தலைமை வகித்தனர். வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் செல்வராஜ் நன்றி கூறினார்.இப்பயிற்சி முகாமில் பேராசிரியர்கள் ராமகிருஷ்ணன், முருகன் ஆகியோர் கோழி வளர்ப்பின் அவசியம், பொருளாதாரம் வளர வழிமுறைகள் குறித்து விளக்கம் அளித்தனர்.