/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அட்சய திருதியையில் மின்வெட்டு; அதிருப்தியான வியாபாரிகள்
/
அட்சய திருதியையில் மின்வெட்டு; அதிருப்தியான வியாபாரிகள்
அட்சய திருதியையில் மின்வெட்டு; அதிருப்தியான வியாபாரிகள்
அட்சய திருதியையில் மின்வெட்டு; அதிருப்தியான வியாபாரிகள்
ADDED : மே 10, 2024 11:18 PM
தேவகோட்டை : தேவகோட்டையில் சில நாட்களாகவே மின்தடை ஏற்பட்டு வருகிறது. வெயில் அதிகரிக்க அதிகரிக்க மின் தடையும் அதிகரித்தது.
வெயில் காலத்தில் டிரான்ஸ்பார்மர் அருகே எர்த்தில் ஈரத்தன்மை இல்லாமல் இருந்தால் தண்ணீர் ஊற்ற வேண்டும். கடந்த வாரம் அண்ணாசாலை பகுதியில் தொடர்ந்து இரண்டு நாட்கள் இரவு முழுவதும் மின்தடை ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டனர். இதேபோல் அண்ணாநகர் ஜீவாநகர், சிதம்பரநாதபுரம் பகுதியிலும் தொடர்ந்து இரவு நேரங்களில் பல மணிநேரம் மின்தடையால் அவதிப்பட்டனர்.
தேவகோட்டை நகரிலும் பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. கடந்த இரண்டு மாதங்களாக மரங்களை வெட்டாததால் மின்கம்பிகளில் உரசி மின் பாதிப்பு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று நகரின் சுற்று பகுதியில் மின்சாரம் இருந்தாலும் வியாபார நிறுவனங்கள் இருக்கும் மையப்பகுதியில் காலையில் ஏற்பட்ட மின்தடை மாலை வரை வரவில்லை.
குறிப்பாக வாடியார் வீதி, மேலபஜார் ரோடு நகைக்கடைகள் இருக்கும் பகுதி.
நகை கடை பஜாரில் அட்சய திருதியை வியாபாரத்திற்கு தயாராக இருந்த நிலையில் மின் தடை காரணமாக வியாபாரிகள் சோகமாயினர்.
பெரிய கடைகளில் ஜெனரேட்டர் வைத்து இருந்தனர். சிறு கடைகளில் இருளாக இருந்தது.