ADDED : மே 06, 2024 12:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்தூர் : திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாள் பிரகார வலம் வந்தனர்.
இக்கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடப்பது வழக்கம். நேற்று மாலை 4:45 மணிக்கு ரமேஷ் குருக்கள், பிரதோஷ க்குருக்கள் பூஜைகள் நடத்தி நந்தி தேவருக்கும், சுவாமிக்கும் அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து பிரதோஷ நாயகர் வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்பாளுடன் எழுந்தருளி சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி பிரகாரங்களில் பக்தர்கள் புடை சூழ வலம் வந்தார்.