
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடியில் விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கம் மற்றும் இதர விஸ்வகர்மா சமூக அமைப்புகள் சார்பில் மாணவர்களுக்கு கல்வி ஊக்கவிருது வழங்கும் விழா நடந்தது.
விஸ்வகர்மா சமூகத்தில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சிறப்பாக தேர்ச்சி பெற்ற 80 மாணவ மாணவியர்களுக்கும், பிற சமூகங்களை சேர்ந்த 25 மாணவ மாணவியர்களுக்கும் கல்வி ஊக்க விருதுகளாக கேடயம், பரிசு வழங்கப்பட்டது.
மாநில நிர்வாகிகள் தெய்வசிகாமணி, முத்துராமலிங்கம் சமூக முன்னேற்ற அறக்கட்டளை தலைவர் சோலைமலை மற்றும் திருச்சி ஆடிட்டர் முத்துச்சாமி, மாவட்டத் தலைவர் முத்துக்குமார் செயலாளர் அப்பாவு ராமசாமி, ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமரன் பொருளாளர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.