ADDED : செப் 18, 2024 06:12 AM

மானாமதுரை : மானாமதுரை அருகே உள்ள மிளகனுார் கிராமத்தில் ஒன்றிய பா.ஜ., சார்பில் பிரதமர் மோடி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏற்பாடுகளை ஒன்றிய தலைவர் ரவிச்சந்திரன், நிர்வாகிகள் நாகராஜ், கோவிந்தராஜ்,மதி ஆகியோர் செய்திருந்தனர்.
* காளையார்கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை முன்னிட்டு காளீஸ்வரன் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. மாவட்ட தலைவர் சத்தியநாதன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் மார்த்தாண்டன், துணைத் தலைவர் சுகனேஸ்வரி, துணை சேர்மன் ராஜா, ஒன்றிய தலைவர்கள் மயில்சாமி, பில்லப்பன், ஒன்றிய பொதுச் செயலாளர்கள் திருஞானம், பாண்டி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
* எஸ்.புதுார் அருகே கரிசல்பட்டி சித்தண்ணசுவாமி கோயிலில் பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு பயனாளிகளுக்கு தையல் மெஷின், மிக்ஸி, அன்னதானம் வழங்கும் விழா நடந்தது. விநாயகர் சதுர்த்திக் குழு கமிட்டி தலைவர் சந்திரசேகர் தலைமை வகித்தார். பா.ஜ., மாநில செயலாளர் அஸ்வத்தாமன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்து முன்னணி மாவட்ட செயாலாளர் அக்னி பாலாஜி, ஒன்றிய நிர்வாகி ஜெயப்பிரகாஷ், வெள்ளைச்சாமி, தேவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
* தேவகோட்டை நகர பா.ஜ., சார்பில் மாநில பொதுக்குழு உறுப்பினர் நகர பொறுப்பாளர் காசிராஜா தலைமையில் சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயிலில் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது. மாவட்ட செயலாளர் லட்சுமி, வடக்கு ஒன்றிய செயலாளர் ராமசுப்பையா, நகர நிர்வாகிகள் குமார், செழியன், சண்முகசுந்தரம், விஜயா, முத்துலட்சுமி பங்கேற்றனர்.
வடக்கு ஒன்றியம் கோட்டூர் மன வளர்ச்சி குன்றியவர்கள் பராமரிப்பு இல்லத்தில் உள்ளவர்களுக்கு ஒன்றிய தலைவர் ராமசுப்பையா தலைமையில் இனிப்பு வழங்கினர். மாவட்ட செயலாளர் லட்சுமி, நிர்வாகிகள் கண்ணன், தமிழ்செல்வன், குணசேகரன் தியாகராஜன், அஜித்குமார், குமரேசன், காளிமுத்து, ரவிச்சந்திரன், வடிவேலு பங்கேற்றனர்