ADDED : ஜூன் 22, 2024 05:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லுாரியில் பணியாற்றும் மூட்டா அமைப்பைச் சேர்ந்த பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு அரசாணை அமல்படுத்தப்பட்டு நிலுவை தொகை வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு நான்கு ஆண்டுகளாகியும் இன்று வரை வழங்கப்படவில்லை. கோயம்புத்தூர், தஞ்சாவூர் மண்டலங்களில் மட்டும் வழங்கி உள்ளனர். மற்ற ஆறு மண்டலங்களில் வழங்கவில்லை. பேராசிரியர்கள் அமைப்பினர் பல முறை அரசு துறை அதிகாரிகளை சந்தித்து முறையிட்டனர்.
எந்த வித பயனில்லை. எனவே அரசு உதவி பெறும் கல்லூரியான தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லுாரி மூட்டா இயக்கத்தைச் சேர்ந்த முதல்வர் நாவுக்கரசு, பேராசிரியர் கண்ணதாசன் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.