ADDED : ஜூலை 23, 2024 05:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டையில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் சார்பில் கலை இலக்கிய இரவு நடந்தது. வழக்கறிஞர் ராம்ஜி தலைமை வகித்தார். செயலாளர் ஞானசுபதர்ஷினி வரவேற்றார். கிளை தலைவர் போஸ் துவக்கி வைத்தார்.
மாவட்ட நிர்வாகிகள் ஜீவசிந்தன், தங்க முனியாண்டி, அன்பரசன், பாலமுருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பொது தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளி, விளையாட்டில் சாதனை படைத்தோருக்கு பரிசு வழங்கப்பட்டன.
தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய தலைவர் பிர்லா கணேசன், தலைமை ஆசிரியர் சேவியர்ராஜ், ராம்நகர் பாதிரியார் வின்சென்ட் அமல்ராஜ், வர்த்தக சங்க தலைவர் மகபூப்பாட்சா ஆகியோர் பேசினர். சங்க மாநில தலைவர் ராமலிங்கம் சிறப்புரை ஆற்றினார். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடந்தது.