ADDED : மார் 12, 2025 12:58 AM
சிவகங்கை; சிவகங்கையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லுாரி ஆசிரியர் நலச்சங்கம் சார்பில் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்டத் தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் சுசிலாதேவி முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் முத்துச்சாமி, ஓய்வு பெற்ற மின் ஊழியர் நலச் சங்கம் விநாயகமூர்த்தி, போக்குவரத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் கோவிந்தராஜன் பேசினர். மாவட்ட பொருளாளர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.
* சிவகங்கையில் அகில இந்திய இளைஞர் கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசின் மும்மொழி கொள்கையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலர் ராகவன் தலைமை வகித்தார்.
சி.பி.ஐ., மாவட்ட செயலர் சாத்தையா, மாவட்ட உதவி செயலர் மருது, மாவட்ட பொருளாளர் மணவழகன், நகர செயலர் சகாயம், ஏஐடியுசி மாவட்ட செயலர் ராஜா உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.