/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கண்டவராயன்பட்டியில் புரவி எடுப்பு
/
கண்டவராயன்பட்டியில் புரவி எடுப்பு
ADDED : ஜூன் 23, 2024 04:01 AM

கணடவராயன்பட்டி: திருப்புத்துார் ஒன்றியம் கண்டவராயன்பட்டியில் காடாப்பிள்ளை அய்யனார், வல்லநாட்டு கருப்பர் கோயில் புரவி எடுப்பு விழா நடந்தது.
ஜூன் 7ல் காப்புக்கட்டி புரவிக்கு பிடிமண் கொடுக்கும் வைபவம் நடந்தது. அதனையடுத்து புரவி வடிக்கப்பட்டது. தொடர்ந்து ஜூன் 14ல் கும்மி கொட்டுதலை தொடர்ந்து கிராமத்தில் பக்தர்கள் விரதம் துவங்கியது. ஜூன் 20ல் வடம் போடுதல் மற்றும் நாட்டார், நகரத்தார்களால் புரவிகளுக்கு கண் திறக்கப்பட்டது.
நேற்று முன்தினம் சேங்கை வெட்டுதலை தொடர்ந்து, புரவிகளுக்கு நாட்டார்கள், நகரத்தார்கள்,கிராமத்தினர் மரியாதை செலுத்தினர். பின்னர் புரவி பொட்டலில் புரவிகள் வைக்கப்பட்டு சாமியாட்டம் நடந்தது.
நேற்று மாலை 5:00 மணிக்கு கிராமத்தினர் புரவிகளை சுமந்து ஊர்வலமாக அய்யனார் கோயிலுக்கு புறப்பட்டனர்.கோயிலில் புரவிகள் சேர்க்கைக்குப் பின் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தன.
காடா பிள்ளை அய்யனார், வல்லநாடு கருப்பர் மற்றும் 21 பரிவார தெய்வங்கள், தேவதைகள், பூதகணங்களுக்கு சிறப்பு பூஜை நடந்தன.