ADDED : ஜூலை 06, 2024 05:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை : தேவகோட்டை அருகே சேவுகபெருமாள் அய்யனார் கோவில் ஆற்றங்கரை நாச்சியம்மன் கோவில் உள்ளது.
கோவில் திருப்பணி முடிந்து கும்பாபிஷேகம் இரு ஆண்டுகளுக்கு முன் நடந்தது. சம்பந்தப்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் திருவிழா நடத்த முடிவு செய்தனர். 19 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த வாரம் திருவிழா துவங்கியது. கடந்த 3ந் தேதி புரவி எடுப்பு நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் குதிரை, காளைகள், உட்பட தங்கள் நேர்த்திக்கடனுக்கு ஏற்ப பொம்மைகளை செய்து ஊர்வலமாக எடுத்து வந்து நாடகத் திடலில் வைத்தனர். இரண்டு நாட்களுக்கு பிறகு நேற்று பொம்மைகள் ஊர்வலமாக சேவுக பெருமாள் அய்யனார் கோவிலுக்கு எடுத்து சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நேற்று மாலை எருது கட்டு மாடு பிடி நிகழ்ச்சி நடந்தது.