/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மாரந்தையில் பால் கொள்முதல்; கலெக்டரிடம் மகளிர் வலியுறுத்தல்
/
மாரந்தையில் பால் கொள்முதல்; கலெக்டரிடம் மகளிர் வலியுறுத்தல்
மாரந்தையில் பால் கொள்முதல்; கலெக்டரிடம் மகளிர் வலியுறுத்தல்
மாரந்தையில் பால் கொள்முதல்; கலெக்டரிடம் மகளிர் வலியுறுத்தல்
ADDED : செப் 04, 2024 12:53 AM
சிவகங்கை : காளையார்கோவில் ஒன்றியம், மாரந்தை கிராமத்தில் பால் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கலெக்டர் ஆஷா அஜித்திடம் மனு அளித்தனர்.
காளையார்கோவில் ஒன்றியம், மாரந்தை ஊராட்சியின் கீழ் தெற்கு, வடக்கு மாரந்தை, கோளந்தி, சேத்துார், மூலக்கரை உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.
இங்குள்ள பால் உற்பத்தியாளர் குழுவில் 60 பெண்கள் வரை உள்ளனர். இவர்கள் வளர்க்கும் பசு மாடுகளின் மூலம் கிடைக்கும் பால், தினமும் 160 முதல் 200 லிட்டர் வரை ஆவின் நிர்வாகத்திற்கு வழங்குகின்றனர். இது தவிர விவசாய பணிகளில் இந்த ஊராட்சியை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளனர்.
இவர்கள் பால் மாடுகள் வளர்ப்பதில் ஆர்வமாக உள்ளனர். பால் மாடுகள் வாங்குவதற்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் கடனுதவி வழங்க வேண்டும். அதே போன்று மாரந்தை ஊராட்சியில் ஆவின் நிர்வாகம் பால் கொள்முதல் நிலையம் அமைத்து, பாலை வாங்கி செல்ல வேண்டும். பசு மாடுகளுக்கு தீவனம் வழங்குதல், பராமரிப்பு செலவு என மாதத்திற்கு ரூ.7 ஆயிரம் வரை செலவிட வேண்டியுள்ளது.
ஆனால், அதன் மூலம் கிடைக்கும் பாலுக்கு ஆவின் நிர்வாகம் லிட்டருக்கு ரூ.31 மட்டுமே தருகின்றனர். கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.40 ஆக உயர்த்தி தர வேண்டும். பரமக்குடியில் இருந்து சேத்துார் வரை செல்லும் அரசு டவுன் பஸ்சை கோளந்தி, தாயனுார் வழியாக காலை, மாலை இரு வேளையும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.