/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் மழை விவசாயிகள் மகிழ்ச்சி
/
சிவகங்கையில் மழை விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : ஆக 05, 2024 10:35 PM
சிவகங்கை,- சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக அனைத்து பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது.
ஆடி பட்டத்தில் தேடி விதைக்க விவசாயிகள் தங்களது நிலங்களை உழவு செய்து வைத்திருந்தனர்.ஆடி பிறந்த உடன் பரவலாக நல்ல மழை பெய்யும் என எதிர்பார்த்திருந்தனர். ஆடி 18 வரை மாவட்டம் முழுவதும் மழையின்றி போனது. விவசாயிகளுக்கு ஆறுதல் தரும் விதமாக நேற்று, நேற்று முன்தினமும் மாவட்ட அளவில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால், மானாவாரியாக நெல் நடவு செய்ய நிலங்களை தயார்படுத்தியிருந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மானாவாரி நெல் மட்டுமின்றி நிலக்கடலை, பயறு வகைகளை நடவு செய்ய தயாராகி விட்டனர்.
தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் பயிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாராகும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். குறிப்பாக நேற்று சிவகங்கை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இரவு 7:00 மணி முதல் 30 நிமிடத்திற்கும் மேலாக நல்ல மழை பெய்தது. ரோட்டில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தொடர் மழையால் பூமி குளிர்ச்சி அடைந்ததால், வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பித்த மகிழ்ச்சியில் மக்கள் உள்ளனர்.