
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம்:திருப்புவனத்தில் நேற்று ஒரு மணி நேரம் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.
தமிழகம் முழுவதும் நிலவிய கோடை வெப்பம் திருப்புவனத்தையும் விட்டு வைக்கவில்லை. கடும் கோடை வெயில் காரணமாக திருப்புவனம் பகுதியில் வெற்றிலை செடிகள் கருக தொடங்கின. தென்னை மரங்களில் விளைச்சலும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மதியம் ஒரு மணி நேரம் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. மதுரை -- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் முன்புற விளக்குகளை எரிய விட்டபடியே சென்றன.