நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை, - பள்ளிக்கல்வித் துறையில் அரசு பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வத்தை துாண்ட வானவில் மன்றம் துவக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள 17 கருத்தாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து துவக்கி வைத்தார். உதவித்திட்ட அலுவலர் பீட்டர் லெமாயு, தமிழ்நாடு அறிவில் இயக்க மாவட்டத்தலைவர் கோபிநாத், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட கவுரவ தலைவர் சாஸ்தா சுந்தரம், காளையார்கோவில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் சேவற்கொடியான், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் ஆரோக்கியம், எய்டு இந்தியா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரகுமத் நிஷா கலந்துகொண்டனர்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சகாய பிரிட்டோ ஏற்பாடுகளை செய்தார்.