/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கால்வாய் சேதத்தால் காணாமல் போகும் மழைநீர்
/
கால்வாய் சேதத்தால் காணாமல் போகும் மழைநீர்
ADDED : ஆக 15, 2024 04:08 AM

சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே சங்கிலித் தொடர் கால்வாய் சேதத்தால் மழை நீர் கண்மாய்களுக்கு செல்லாமல் வீணாகி வருகிறது.
இவ்வொன்றியத்தில் அ.காளாப்பூர், மு.சூரக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு சங்கிலித் தொடர் கண்மாய்கள் மூலம் மழைநீர் செல்ல கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு குண்டுகற்களை கொண்டு பல லட்சம் செலவில் அமைக்கப்பட்ட நிலையில் சில வருடங்களாக இக்கால்வாய்கள் மறைந்து வருகிறது. குறிப்பாக குண்டுகற்களை ஆங்காங்கே சிலர் உடைத்து திருடி செல்கின்றனர். அந்த இடங்களில் கால்வாய் முற்றிலும் மறைந்து வருகிறது. மழைக்காலங்களில் ஒரு கண்மாயில் இருந்து மறுகால் பாயும் தண்ணீர் அடுத்த கண்மாய்க்கு சென்று சேர்வது தடைபடுகிறது. எனவே இப்பகுதியில் உள்ள அனைத்து கால்வாய்களையும் சீரமைத்து மழை நீர் முறையாக சங்கிலித் தொடர் கண்மாய்களுக்கு சென்று சேர்வதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.