/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கோதண்டராமர் கோயிலில் ராமநவமி கொடியேற்றம்
/
கோதண்டராமர் கோயிலில் ராமநவமி கொடியேற்றம்
ADDED : ஏப் 18, 2024 06:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டை கோதண்டராமர் சுவாமி கோயிலில் நேற்று ராமநவமி பிரமோற்சவ 11 நாள் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக ராமர், சீதை, லட்சுமணன், சிறப்பு திருமஞ்சனம் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சீனிவாச பட்டர் , பாலாஜி பட்டர் தலைமையில் வேதமந்திரங்கள், திருவெம்பாவை பாடப்பட்டு கொடிமரம், மூலவர் , உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தன.
நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ராம நவமியை முன்னிட்டு பக்தர்களுக்கு நெல், காசு வழங்கப்பட்டது. ஏப்., 22ந்தேதி திருக்கல்யாணமும், 25ல் தேரோட்டமும் நடைபெறுகிறது.

