/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தொகுதிக்கு 5 ஆயிரம் பேர் சேர்ப்பு; முன்னாள் அமைச்சர் சிதம்பரம் பேச்சு
/
தொகுதிக்கு 5 ஆயிரம் பேர் சேர்ப்பு; முன்னாள் அமைச்சர் சிதம்பரம் பேச்சு
தொகுதிக்கு 5 ஆயிரம் பேர் சேர்ப்பு; முன்னாள் அமைச்சர் சிதம்பரம் பேச்சு
தொகுதிக்கு 5 ஆயிரம் பேர் சேர்ப்பு; முன்னாள் அமைச்சர் சிதம்பரம் பேச்சு
ADDED : ஜூன் 11, 2024 11:02 PM
மானாமதுரை: காங்., கட்சியை வலுப்படுத்தும் வகையில் தொகுதிக்கு 5 ஆயிரம் பேரை புதிதாக கட்சியில் இணைத்து உறுப்பினர்களாக சேர்க்க வேண்டுமென முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் பேசினார்.
இளையான்குடி,மானாமதுரை பகுதி நகர ஒன்றிய காங்., நிர்வாகிகளை சந்தித்த பின் சிதம்பரம் பேசுகையில், நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மற்ற கட்சிகளை விட மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் காங்.,கட்சி அதிக ஓட்டுக்களை பெற்றுள்ள நிலையில் வாக்காளர்களை சந்தித்து நன்றி சொல்ல வேண்டும்.
காங்., கட்சியை வலுப்படுத்தும் வகையில் வரும் 6 மாதங்களில் தொகுதிக்கு 5 ஆயிரம் பேரை புதிதாக காங்., கட்சியில் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சியை இளம் வாக்காளர்கள் அதிக அளவில் ஆதரித்துள்ளனர்.
ஆகவே நாம் தமிழர் கட்சியினரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.இளம் வாக்காளர்கள் காங்., கட்சியை ஆதரிக்கும் வகையில் நிர்வாகிகள் செயல்பட வேண்டுமென்றார்.
மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் காங்., வேட்பாளர் கார்த்தி வெற்றிக்கு பாடுபட்ட நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவித்து பேசினார்.
மாவட்டத் தலைவர் சஞ்சய் காந்தி,மூத்த தலைவர் ஏ.ஆர்.பி., முருகேசன், நகர தலைவர் புருஷோத்தமன், நிர்வாகிகள் முத்துக்குமார், ராமு, சோமசுந்தர பாரதி, காசி ராமலிங்கம், பால் நல்ல துரை கலந்து கொண்டனர்.