/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மறுப்பு பள்ளி வளாகத்தை சுத்தம் செய்யும் பணி பாதிப்பு; நுாறு நாள் பணியாளர்களை அனுப்ப ஊராட்சிகள்
/
மறுப்பு பள்ளி வளாகத்தை சுத்தம் செய்யும் பணி பாதிப்பு; நுாறு நாள் பணியாளர்களை அனுப்ப ஊராட்சிகள்
மறுப்பு பள்ளி வளாகத்தை சுத்தம் செய்யும் பணி பாதிப்பு; நுாறு நாள் பணியாளர்களை அனுப்ப ஊராட்சிகள்
மறுப்பு பள்ளி வளாகத்தை சுத்தம் செய்யும் பணி பாதிப்பு; நுாறு நாள் பணியாளர்களை அனுப்ப ஊராட்சிகள்
ADDED : ஜூன் 04, 2024 05:32 AM
மானாமதுரை : தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்பு வரும் 10ம் தேதி அரசு பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் பள்ளி வளாகங்கள் எப்போது சுத்தம் செய்யப்படும் என மாணவர்கள்,ஆசிரியர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தமிழகத்தில் அரசு பள்ளிகள்,உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் கோடை விடுமுறைக்கு பின் வருகிற 6ம் தேதி திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதை தொடர்ந்து பள்ளி திறப்பு தள்ளி வைக்கப்பட்டு வருகிற 10ம் தேதி திறக்கப்பட உள்ளன.
கடந்த 2 மாதமாக பள்ளிகள் பூட்டிக்கிடந்ததை தொடர்ந்து வளாகம் முழுவதும் குப்பை நிறைந்திருக்கும் என்பதால் பள்ளி வளாகங்களை சுத்தம் செய்து வைக்க வேண்டுமென தமிழக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டிருந்தனர்.
அரசு பள்ளிகளை அந்தந்த ஊராட்சி நிர்வாகத்தில் 100 நாள் வேலை பார்க்கும் பணியாளர்களைக் கொண்டு மாதத்தில் ஒரு நாள் சுத்தம் செய்யும் பணி வழக்கமாக இருந்து வருகிறது.அதேபோன்று காலாண்டு மற்றும் அரையாண்டு,கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் போது இவர்களை வைத்து சுத்தம் செய்து வந்தனர்.இந்நிலையில் இந்த வருடம் கோடை விடுமுறை முடியும் தருவாயில் அரசு பள்ளிகளை சுத்தம் செய்ய வேண்டும் என்று பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் கூறுகையில், 100 நாள் பணியாளர்கள் தற்போது பள்ளிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட மாட்டார்கள் என தெரிவித்ததால் தலைமை ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது:
பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் 100 நாள் பணியாளர்களைக் கொண்டு பள்ளி வளாகங்களை சுத்தம் செய்து சுகாதாரமான முறையில் வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவு போட்டுள்ளனர்.ஆனால் 100 நாள் பணியாளர்கள் பள்ளி வளாகங்களை சுத்தம் செய்ய ஊராட்சி நிர்வாகத்தினர் அனுப்ப மறுப்பதால் என்ன செய்வதென்று தெரியாத நிலையில் உள்ளோம்.மாவட்ட கலெக்டர் உடனடியாக அரசு பள்ளிகளை சுத்தம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கூறியதாவது:
பள்ளி திறப்பதற்கு இன்னும் ஒரு வார கால அவகாசம் உள்ளதால் ஊராட்சி பணியாளர்களை கொண்டும், 100 நாள் பணியாளர்களை கொண்டும் இன்னும் 3 நாட்களுக்குள் பள்ளி வளாகங்களை சுத்தம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என்றனர்.