/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பணியிடம் காலி
/
வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பணியிடம் காலி
ADDED : பிப் 25, 2025 06:49 AM

சிவகங்கை: சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் காலியாக உள்ள பி.ஏ., மற்றும் ஆய்வாளர் பணியிடங்களை நிரப்பாததால் புதிய வாகன பதிவு, லைசென்ஸ் பெற நுாற்றுக்கணக்கானவர்கள் காத்திருக்கின்றனர்.
சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தினமும் 120 புதிய வாகன பதிவு, 25 வாகனங்கள் பதிவினை புதுப்பித்தல், 40 க்கும் மேற்பட்டவர்கள் லைசென்ஸ், வாகனம் ஓட்டி காட்டுதல்உள்ளிட்ட பணிக்காக வருகை தருகின்றனர்.
காஞ்சிரங்கால் ஊராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள திடலில் வாகன பதிவு பணி நடைபெற்று வருகின்றன. வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலரின் கீழ், பி.ஏ., 2 ஆய்வாளர்கள்மற்றும் அலுவலர்கள் பணிபுரிய வேண்டும்.
வட்டார போக்குவரத்து அலுவலக திடலில் வாகன பதிவு, பதிவு புதுப்பித்தல், லைசென்ஸ் வழங்குதல் போன்ற பணிகளை ஆய்வாளர்கள் மேற்கொள்ள வேண்டும். இந்த பணிகள்முறையாக நடக்கிறதா என்பதை வட்டார போக்குவரத்து அலுவலர், அவரதுபி.ஏ., கண்காணிக்க வேண்டும்.
ஆனால், சிவகங்கையில் வாகன பதிவு, லைசென்ஸ் பெற வருவோரை பல மணி நேரம் காக்க வைக்கும் நிலைக்கு வட்டார போக்குவரத்து அலுவலக நிலைமை உள்ளது. இங்கு பி.ஏ., மற்றும் 2 ஆய்வாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதனால், உரிய நேரத்தில்லைசென்ஸ் பெற முடியாமலும், ஆன்லைனில் பதிவுகளை ஏற்ற முடியாமலும், புதிய வாகன பதிவுகளை செய்ய முடியாமல் திடலில் ஏராளமான வாகனங்கள் பல மணி நேரம் காத்திருக்கின்றன.
எனவே அரசு போக்குவரத்து துறை நிர்வாகம் காலியாக உள்ள ஆர்.டி.ஓ.,பி.ஏ., மற்றும் 2 ஆய்வாளர் பணியிடங்களை நிரப்பி மக்கள் தடையின்றி வாகன பதிவு, லைசென்ஸ் பெறுதல், புதுப்பித்தல் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

