ADDED : ஜூலை 16, 2024 04:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம் : மதுரையில் இருந்து பரமக்குடி வரை செல்லும் நான்கு வழிச்சாலையில் சிலைமான், திருப்புவனம், மானாமதுரை, கமுதக்குடி உள்ளிட்ட இடங்களில் 11 பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.
பெரும்பாலான பாலத்தின் பக்கவாட்டு பகுதியில் உள்ள இடைவெளியில் மரங்கள் வளர்ந்து பாலத்தின் தாங்கு திறனை பாதித்து வருகிறது.
இது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானதை அடுத்து பாலங்களின் பக்கவாட்டில் வளர்ந்த மரங்களை ஊழியர்கள் அகற்றி வருகின்றனர்.