/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சீரமைக்கப்பட்ட- குளத்துப்பட்டி சாலை
/
சீரமைக்கப்பட்ட- குளத்துப்பட்டி சாலை
ADDED : மார் 06, 2025 04:41 AM
எஸ்.புதுார்: தினமலர் செய்தி எதிரொலியாக பழுதடைந்த பல்லாங்குழி சாலை சீரமைக்கப்பட்டது.
எஸ்.புதூர் ஒன்றியத்தில் இரணிபட்டி கிராமத்திலிருந்து குளத்துப்பட்டி செல்லும் தார் சாலை 8 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 76 லட்சம் செலவில் புதிதாக போடப்பட்டது. ஆனால் ஓரிரு நாட்களிலேயே கற்கள் பெயர்ந்து அவ்வழியாக செல்ல முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர். சாலை தரம் இல்லாமல் போடப்பட்டதாக புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லாமல் இருந்தது. இதனால் இரணிபட்டி, அம்மாபட்டி, பெருமாள்பட்டி, வடகாடு, பில்லாம்பட்டி, அரியாண்டிபட்டி மக்கள் அவதிக்கு உள்ளாகினர். தொடர்ந்து சாலை பராமரிப்பு, ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் இருந்து மாநில நெடுஞ்சாலை துறைக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் இச்சாலையின் நிலை குறித்து தினமலரில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக 3.6 கி.மீ., தூர இச்சாலை தற்போது புதிதாக போடப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது.